Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நிறைவு நாளான 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுமா?

Admin 4 days ago தூத்துக்குடி

புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோவிலின் தசரா திருவிழா, கடந்த 11-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது.


தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், வரும் 20-ம் தேதி இரவு நடைபெறுகிறது.


சூரசம்ஹாரத்தைத் தொடர்ந்து, அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதையடுத்து, 21-ம் தேதி மாலை சப்பரம் மீண்டும் கோவிலை வந்தடைந்ததும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பின்னர் கொடிப்பட்டம் இறக்கப்பட்டு, பக்தர்களின் காப்புகள் களையப்படும். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகே தசரா திருவிழா முழுமையாக நிறைவடையும்.

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு, பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் என லட்சக்கணக்கானோர் விரதம் மேற்கொண்டு மாலை அணிந்து காப்பு கட்டியுள்ளனர். பக்தர்கள் பலரும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் விரதம் இருந்து வருகின்றனர்.

காப்பு களையும் நாளில் வேலை நாளா?

தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளைக் காணவும், விரதத்தை நிறைவு செய்யவும் லட்சக்கணக்கானோர் குலசேகரன்பட்டினத்தில் திரளுவார்கள்.

திருவிழாவின் இறுதிக்கட்ட நிகழ்வுகள் 21-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் வேலை நாளாக இருப்பது பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அரசு ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தனியார் நிறுவனப் பணியாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ளதால், காப்பு களையும் நாளில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டால் அவர்கள் எவ்வித இடையூறும் இன்றி தங்களது விரதத்தை நிறைவு செய்யவும், திருவிழாவில் பங்கேற்கவும் வாய்ப்பாக அமையும்.

எனவே, லட்சக்கணக்கான பக்தர்களின் ஆன்மிக உணர்வுகளையும், அவர்களின் கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, வரும் 21-ம் தேதி குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்க தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி நந்தகோபாலபுரம் செல்வநாயகபுரம் பத்திரகாளி அம்மன் திருக்கோயில் தசரா திருவிழா மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

3 hours ago

அதிமுக 55-வது ஆண்டு தொடக்க விழா: புதுக்கோட்டை பஜாரில் நிர்வாகிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்!

1 day ago

மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? இரட்டை வேடம் போடும் தமிழக அரசு; முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம்

3 days ago

தூத்துக்குடி சிவன் கோவிலில் தசரா விழா சிறப்பு பூஜை! மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா பங்கேற்பு

4 days ago

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்: கயத்தாறில் அதிமுகவினர் திரளாக பங்கேற்க எடப்பாடி பழனிசாமி அழைப்பு!

4 days ago

தூத்துக்குடி கண்ணா சில்க்ஸில் பட்டாசு தீபாவளி கொண்டாட்டம்! ரூ.2,500-க்கு மேல் ஜவுளி வாங்கினால் பட்டாசுப் பெட்டி பரிசு!

5 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement