Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? இரட்டை வேடம் போடும் தமிழக அரசு; முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம்

Admin 3 days ago தூத்துக்குடி

தூத்துக்குடி அக்:16

தமிழகத்தில் மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தொிவித்திருப்பதாவது:


தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு 717 மதுபானக் கடைகள் மூடப்படும் என முதலமைச்சர் விஜய். அறிவித்திருந்தாா். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சில கடைகள் மூடப்பட்டது. தற்போது ஓட்டபிடாரம் தொகுதி துப்பாஸ்பட்டி வெள்ளப்பட்டி அய்யனார்புரம் கிராமங்களுக்கான பேருந்து நிறுத்தம் அருகே புதிய மதுக்கடையோடு, மனமகிழ் மன்றங்களையும் திறந்திருக்கிறார்கள்.


முன்வாசலை மூடிவிட்டு பின்வாசலை திறப்பதுபோல கடைகளை மூடிவிட்டு பின்னர் புதிதாக மதுக்கடைகளை திறந்து வருகிறது இரட்டை வேட தவெக அரசு. இதுதான் மதுக்கடைகளை குறைக்கும் லட்சணமா தவெக ஆட்சிக்கு வந்தவுடன் மூடிய கடை மீண்டும் திறக்கப்பட்டது ஏன் திறக்கச் சொன்னது யார் அப்படியென்றால் மூடப்பட்ட 717 மதுக்கடைகளும் மாற்று இடங்களில் மீண்டும் திறக்கப்பட்டுவிட்டதா?


துப்பாஸ்பட்டி வெள்ளப்பட்டி அய்யனார்புரம் ஆகிய மூன்று கிராம மக்களுக்கும் பொதுவான பேருந்து நிலையம் இருக்குமிடத்தில் டாஸ்மாக் கடை செயல்படுவதால் பொதுவெளியில் மது அருந்துவது, இருதரப்பு மோதிக் கொள்வது, நடமாடும் சாமானியர்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் அரங்கேறுவதால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியிருக்கிறது. முன் பக்கம் மதுகடையும், அதன் பின்புறம் பார் மற்றும் மனமகிழ் மன்றமும் இருப்பதால் பள்ளி செல்லும் மாணவிகள் பெரும் அச்சுறுத்தலாக அமைகிறது. மதுக்கடையை மூட வேண்டும் என் அப்பகுதி மக்கள் அமைச்சர் பெருமக்களிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை கோரிக்கை வைத்தும் சாலை மறியல் போராட்டம் நடத்தியும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.


தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் போட்டு ஊர் மக்களிடமும் எட்டு நாட்களுக்கு கடை மூடப்பட்டிருக்கும் பின்பு கடையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறப்பட்டது. ஆனால் எந்த உறுதியும் பின்பற்றப்படவில்லை உடனே மறுநாளே பின்வாசல் வழியாக மது விற்பனை ஜோராக நடக்கிறது. சமாதான கூட்டம் போட்டு பொதுமக்களை ஏமாற்றுகிறது இந்த அரசு. நியாயமான கோரிக்கையுடன் போராடும் மக்களின் கோரிக்கைகளை தவெக அரசு அலட்சியமாக கையாள்வது கடும் கண்டனத்துக்குரியது.


சினிமா பாடல் பாணியில் ரீல்ஸ் ஆட்சி நடத்திக் கொண்டு 'பெண்களுக்கு தாய்மாமனாக இருப்பேன்' என நீங்கள் சொல்லலாமா? அண்ணனாக, தம்பியாக, தாய்மாமனாக இருப்பேன் என வசனத்தை மட்டும் பேசிக் கொண்டிருக்காமல் துப்பாஸ்பட்டி வெள்ளப்பட்டி அய்யனார்புரம் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று 10060 எண் கொண்ட மதுக்கடையை உடனடியாக மூட உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரை வலியுறுத்துகிறேன் என்று வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தொிவித்துள்ளாா்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி நந்தகோபாலபுரம் செல்வநாயகபுரம் பத்திரகாளி அம்மன் திருக்கோயில் தசரா திருவிழா மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

3 hours ago

அதிமுக 55-வது ஆண்டு தொடக்க விழா: புதுக்கோட்டை பஜாரில் நிர்வாகிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்!

1 day ago

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நிறைவு நாளான 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுமா?

4 days ago

தூத்துக்குடி சிவன் கோவிலில் தசரா விழா சிறப்பு பூஜை! மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா பங்கேற்பு

4 days ago

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்: கயத்தாறில் அதிமுகவினர் திரளாக பங்கேற்க எடப்பாடி பழனிசாமி அழைப்பு!

4 days ago

தூத்துக்குடி கண்ணா சில்க்ஸில் பட்டாசு தீபாவளி கொண்டாட்டம்! ரூ.2,500-க்கு மேல் ஜவுளி வாங்கினால் பட்டாசுப் பெட்டி பரிசு!

5 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement