Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி சிவன் கோவிலில் தசரா விழா சிறப்பு பூஜை! மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா பங்கேற்பு

Admin 4 days ago தூத்துக்குடி

தூத்துக்குடி:அக:15

இந்துக்களின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான தசரா விழா நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆயுத பூஜையன்று தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் மற்றும் உபகரணங்களுக்கு பூஜை செய்து வழிபடுவது வழக்கமாகும்.


தூத்துக்குடியில் புகழ்பெற்ற பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில், மாநகராட்சி ஊழியர்கள் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது.
அதன்படி, இந்த ஆண்டு நடைபெற்ற சிறப்பு பூஜையில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், அவர்களை வரவேற்று சிறப்பு பூஜைகள் செய்து பிரசாதம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி சுகாதாரக் குழுத் தலைவர் சுரேஷ்குமார், முன்னாள் கவுன்சிலர் ரவீந்திரன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி நந்தகோபாலபுரம் செல்வநாயகபுரம் பத்திரகாளி அம்மன் திருக்கோயில் தசரா திருவிழா மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

3 hours ago

அதிமுக 55-வது ஆண்டு தொடக்க விழா: புதுக்கோட்டை பஜாரில் நிர்வாகிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்!

1 day ago

மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? இரட்டை வேடம் போடும் தமிழக அரசு; முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம்

3 days ago

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நிறைவு நாளான 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுமா?

4 days ago

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்: கயத்தாறில் அதிமுகவினர் திரளாக பங்கேற்க எடப்பாடி பழனிசாமி அழைப்பு!

4 days ago

தூத்துக்குடி கண்ணா சில்க்ஸில் பட்டாசு தீபாவளி கொண்டாட்டம்! ரூ.2,500-க்கு மேல் ஜவுளி வாங்கினால் பட்டாசுப் பெட்டி பரிசு!

5 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement