தூத்துக்குடி:அக்;17
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 55-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ். பி.சண்முகநாதன் ஆலோசனையின்படி, புதுக்கோட்டை பஜாரில் அதிமுக சார்பில் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜாக்ஸன் துரைமணி தலைமை தாங்கினார். தூத்துக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் ஜவஹர் பொதுமக்களுக்கும் கட்சி நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் வழங்கி விழாவைக் கொண்டாடினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் எஸ்.எம்.ஏ. கோசல்ராம்ராஜா,

மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் முருகேசன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் தங்கத்துரை, மாவட்டப் பேரவை துணைச் செயலாளர் அரவிந்த், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் சரவணவேல், சுப்பிரமணியன், கிளைச் செயலாளர்கள் துரைராஜ், சுப்புநாராயணன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.