Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள்: கயத்தாறில் அதிமுகவினர் திரளாக பங்கேற்க எடப்பாடி பழனிசாமி அழைப்பு!

Admin 4 days ago தூத்துக்குடி
தூத்துக்குடி:அக்14
வீரபாண்டிய கட்டபொம்மனின் 227-வது நினைவு நாளையொட்டி, வரும் 16-ம் தேதி கயத்தாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அதிமுக சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் சுதந்திரத்திற்காக ஆங்கிலேய ஆதிக்கத்தைத் துணிச்சலுடன் எதிர்த்துப் போராடியவரும், வீரமும் விவேகமும் நிறைந்தவருமான வீரபாண்டிய கட்டபொம்மனின் 227-வது நினைவு நாளையொட்டி, 16.10.2026 வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், அதிமுக அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி, அதிமுக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் உள்ளவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், அதிமுக வர்த்தக அணிச் செயலாளரும், தூத்துக்குடி மாநகரச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன், அதிமுக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, விருதுநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.ஜெயபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, அதிமுக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் உள்ளவருமான எஸ்.பி.சண்முகநாதன் மேற்கொள்கிறார்.

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கட்சியின் சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் தற்போதைய மற்றும் முன்னாள் பிரதிநிதிகள், கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி நந்தகோபாலபுரம் செல்வநாயகபுரம் பத்திரகாளி அம்மன் திருக்கோயில் தசரா திருவிழா மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

3 hours ago

அதிமுக 55-வது ஆண்டு தொடக்க விழா: புதுக்கோட்டை பஜாரில் நிர்வாகிகள் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்!

1 day ago

மூடப்பட்ட மதுக்கடைகளை மீண்டும் திறப்பதா? இரட்டை வேடம் போடும் தமிழக அரசு; முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் கண்டனம்

3 days ago

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா நிறைவு நாளான 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுமா?

4 days ago

தூத்துக்குடி சிவன் கோவிலில் தசரா விழா சிறப்பு பூஜை! மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா பங்கேற்பு

4 days ago

தூத்துக்குடி கண்ணா சில்க்ஸில் பட்டாசு தீபாவளி கொண்டாட்டம்! ரூ.2,500-க்கு மேல் ஜவுளி வாங்கினால் பட்டாசுப் பெட்டி பரிசு!

5 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement