தூத்துக்குடி அருகே பாளையங்கோட்டை சாலையில் உள்ள வாகைகுளத்திலிருந்து முடிவைத்தானந்தல் சாலையில் திரும்ப முயன்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று எதிர்பாராதவிதமாக இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சத்யா மற்றும் அமுதா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் அதிவேகமாகத் தப்பிச் சென்றது.
இதுகுறித்துத் தகவலறிந்த புதுக்கோட்டை காவல் நிலையப் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிய காரைக் கண்டறிய அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் நாசரேத் மற்றும் புதுக்கோட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.