Share On
மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி 3வது வார்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்: புதிய ரேஷன் கடை திறப்பு; கவுன்சிலர் ரெங்கசாமி திறந்து வைத்தார்

Admin 16 hours ago தூத்துக்குடி
தூத்துக்குடி, செப். 1:
தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டுக்கு உட்பட்ட ஆர்.எஸ்.பி.ஆர். நகர் பகுதியில், முன்னாள் எம்எல்ஏ சண்முகையாவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.

இந்த புதிய ரேஷன் கடையை, தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு திமுக கவுன்சிலரும், மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளருமான ஆர். ரெங்கசாமி, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டதன் மூலம், ஆர்.எஸ்.பி.ஆர். நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எளிதாகவும் வசதியாகவும் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

கவுன்சிலர் ஆர்.ரெங்கசாமி தலைமை ஏற்று திறந்து வைத்த இந்த நிகழ்ச்சியில் 


 மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தனுஷ் பாலன், தொமுச நிர்வாகிகள் முத்துராஜ், பால்ராஜ், செல்வராஜ், முத்துமணி, இ.பி. செல்வராஜ், வீரப்பன், சண்முகவேல், ராஜாமணி, பி.எஸ்.என்.எல். சண்முகையா, பாலசுப்பிரமணியன், மதி பிரகாஷ், ஜி. பாலசுப்பிரமணியன், ஜவஹர், முகமது நூர்தீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

பூலித்தேவன் புகழ் போற்றிய திமுக: கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை

19 hours ago

தூத்துக்குடி அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

1 day ago

தூத்துக்குடியில் விதிகளை மீறிய 4 ராஜஸ்தான் லாரிகள் சிறைபிடிப்பு: லாரி உரிமையாளர்கள் அதிரடி!

1 day ago

நிலம் ஒதுக்கியும் வீட்டு மனை வழங்கவில்லை: தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் வேதனை; 39 ஆண்டுகளாக தொடரும் கோரிக்கை !!

3 days ago

தூத்துக்குடி குறுக்குசாலை கீதாஜீவன் கல்லூரியில் மாணவர் பேரவை நிர்வாகிகள் பதவியேற்பு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பங்கேற்பு

3 days ago

மரக்கன்று நடும் விழா பெயரில் வசூல் வேட்டை? தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மீது வியாபாரிகள் புகார்

4 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement