Share On
மாவட்ட செய்திகள்

மரக்கன்று நடும் விழா பெயரில் வசூல் வேட்டை? தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மீது வியாபாரிகள் புகார்

Admin 4 days ago தூத்துக்குடி

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான செலவுகளுக்காக மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு வியாபாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் வியாபாரிகள் மத்தியில் மாநகராட்சி நிர்வாகம் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, வருகிற 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி பகுதிகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என அறிவித்து, இதற்காக நான்கு மண்டலங்களுக்கும் அதிகாரிகளை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த அதிகாரிகளின் கீழ் பணியாற்றும் அலுவலர்கள், தங்களது மண்டலங்களுக்கு உட்பட்ட தொழில் நிறுவனங்கள், ஏஜென்சிகள் மற்றும் மொத்த வியாபாரிகளை அணுகி, மரக்கன்றுகளுக்கு கூண்டு உள்ளிட்ட ஏற்பாடுகளுக்காக குறிப்பிட்ட தொகையை நிதியுதவியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருவதாக வியாபாரிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரக்கன்று நடும் விழா என்ற பெயரில் வியாபாரிகளிடம் அதிகாரிகள் பணம் வசூலிப்பதற்கு யார் அனுமதி அளித்தது? என வியாபாரிகள் கேள்வி எழுப்புகின்றனர். இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் சென்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

முன்னதாக மாநகராட்சி சார்பில் ஹைமாஸ் விளக்குகள் உள்ளிட்ட பணிகளுக்காக வியாபாரிகளிடம் நிதி பெறப்பட்டபோது, நிதியுதவி வழங்கியவர்களுக்கு மாநகராட்சி சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டதாகவும், தற்போது மரக்கன்றுகள் நடும் திட்டத்திற்காக வசூலிக்கப்படும் தொகைக்கு உரிய வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த நான்கு ஆண்டுகளில் மாநகராட்சி பகுதிகளில் மட்டுமின்றி பல்வேறு இடங்களிலும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது புதிதாக ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதும் கேள்வியை எழுப்பியுள்ளது.

மேலும், இந்த மரக்கன்று நடும் விழா தொடர்பான நிகழ்ச்சிகளில் அந்தந்த மண்டலத் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாமன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மாமன்ற உறுப்பினர்களுக்கும் இடையே ஏற்கனவே நிலவி வரும் கருத்து வேறுபாடுகள் மேலும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மரக்கன்று நடும் திட்டத்திற்கு வியாபாரிகளிடம் கட்டாயமாகவோ, கெடுபிடியாகவோ பணம் வசூலிப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இதுபோன்ற வசூலில் ஈடுபட்டதாக கூறப்படும் அதிகாரிகள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மரக்கன்றுகள் நடுவது வரவேற்கத்தக்கது; ஆனால் அதற்காக வியாபாரிகளிடம் கட்டாய வசூல் செய்வது ஏன்?” என்பதே தற்போது வியாபாரிகள் மத்தியில் எழுந்துள்ள முக்கிய கேள்வியாக உள்ளது.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி 3வது வார்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்: புதிய ரேஷன் கடை திறப்பு; கவுன்சிலர் ரெங்கசாமி திறந்து வைத்தார்

17 hours ago

பூலித்தேவன் புகழ் போற்றிய திமுக: கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை

19 hours ago

தூத்துக்குடி அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

1 day ago

தூத்துக்குடியில் விதிகளை மீறிய 4 ராஜஸ்தான் லாரிகள் சிறைபிடிப்பு: லாரி உரிமையாளர்கள் அதிரடி!

1 day ago

நிலம் ஒதுக்கியும் வீட்டு மனை வழங்கவில்லை: தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் வேதனை; 39 ஆண்டுகளாக தொடரும் கோரிக்கை !!

3 days ago

தூத்துக்குடி குறுக்குசாலை கீதாஜீவன் கல்லூரியில் மாணவர் பேரவை நிர்வாகிகள் பதவியேற்பு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பங்கேற்பு

3 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement