Share On
மாவட்ட செய்திகள்

நிலம் ஒதுக்கியும் வீட்டு மனை வழங்கவில்லை: தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் வேதனை; 39 ஆண்டுகளாக தொடரும் கோரிக்கை !!

Admin 3 days ago தூத்துக்குடி

எல்லோருக்கும் நன்மை கிடைக்கும் என்று முதல்வா் விஜய் அறிவித்தது போல் தூத்துக்குடி பத்திாிகையாளா்கள் கோாிக்கையை நிறைவேற்ற வேண்டும்.


தூத்துக்குடி தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய் இந்தியாவிற்கு தமிழகம் முன் மாதிரி மாநிலமாக திகழ வேண்டும் அதற்கு அனைவரும் ஓத்துழைக்க வேண்டும் என்று கேட்டுகொண்டதற்கிணங்க அனைத்து அமைச்சர்களும், அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர்.


தமிழகத்தில்ஊடகத்துறையில் பணியாற்றும் பத்திரிகைத்துறை சார்ந்தவர்கள் கோரிக்கையும் நிறைவேற்றி தரப்படும் என்று பல்வேறு அறிவிப்புகள் சட்டமன்ற கூட்ட தொடரின் போது கடந்த காலத்தில் அமைச்சர்கள் வெளியிட்டனர். பல அறிவிப்புகள் அரசாணையும் வெளியிடப்பட்டது.


ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமாக இருந்ததை 1986ல் கடந்த 39 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர் நெல்லையிலிருந்து தனி மாவட்டமாக தூத்துக்குடியை உருவாக்கி கொடுத்தார்.


தூத்துக்குடி மாவட்ட தலைநகரில் பணியாற்றும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோருக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மானிய விலையிலான வீட்டுமனை இன்று வரை வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்று கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கோாிக்கையின்படி 2015ம் ஆண்டு முதல் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் தூத்துக்குடி அருகே சேர்வைகாரன் மடம் ஊராட்சியில் 3 ஏக்கர் 97 சென்ட் இடம் ஒதுக்கப்பட்டது.


ஆனால் அதன் முன் பகுதியில் உள்ள நுழைவு வாயில் தனியாருக்கு சொந்தமான பட்டா இடமாக இருந்தது இதை மாவட்ட நிர்வாகம் சம்மந்தப்பட்டவர்களிடம் பேசி அந்த இடத்தை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்,அதை சீர்செய்து தருகிறோம் என்று உறுதியளித்தனர்.


அதன் பின் தனியாருக்கு சொந்தமான இடத்தின் உரிமையாளரிடம் பேசி அதற்கான தொகையை தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் பணம் கொடுக்கப்பட்டு புதுக்கோட்டை பத்திரபதிவு அலுவலகத்தில் ஆளுநர் பெயருக்கு பதிவு செய்யப்பட்டு அதன் ஒரிஜினல் ஆவணங்களை கடந்த 2020 பிப்ரவரி மாதம் 13ம் தேதி அப்போது கலெக்டராக இருந்த சந்திப் நந்தூரியிடம் அப்போது பிரஸ்கிளப் தலைவராக இருந்த சண்முகசுந்தரம், செயலாளராக இருந்த பிரபாகரன், ஆகியோர் நேரில் வழங்கினார்கள்.


நெல்லை, மதுரை என பல மாவட்டங்களில் இரண்டு மற்றும் 3ம் கட்டமாக இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தூத்துக்குடியில் பணியாற்றும் ஊடகத்துறையினருக்கு ஒரு முறைக்கூட வழங்கப்படவில்லை.

மாவட்ட நிர்வாகத்தால் கேட்டுக்கொண்ட படி பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.


அதன்படி முதல்வா் விஜய் எல்லா துறையிலும் தமிழகம் முன் மாதிரியாக செயல்பட வேண்டும் என்று பணியாற்றும் அவருக்கு செய்தித்துறை தான் வெளி உலகத்திற்கு ஆட்சியின் செயல்பாடுகளையும், கட்சியின் செயல்பாடுகளையும் கொண்டு வரும் துறையாகும்.


அந்த துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தூத்துக்குடி மாவட்டம் உருவாகி 39 ஆண்டுகாலம் நிறைவேறாத திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றி தரவேண்டும் என்று அப்போது தலைவராக சண்முகசுந்தரம், செயலாளராக பிரபாகரன், பொருளாளராக சீனிவாசன், துணைத்தலைவராக ராஜேஷ், இணைச்செயலாளராக ஜாய்சன், ஆகியோர் பொறுப்பில் இருந்த காலத்தில் வழங்கப்பட்டு 6 ஆண்டுகளாகியும் தமிழக அரசும் மாவட்ட நிா்வாகமும் தூத்துக்குடி பத்திாிகையாளா்களுக்கான கோாிக்கைகளை நிறைவேற்றி கொடுக்காமல் காலம் தாழ்த்தி கொண்டே செல்கின்றனா். ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறாத நிலை உள்ளது. இந்த நிலையை மாற்றி பத்திாிகையாளா்களின் கோாிக்கையை முதல்வா் விஜய் நிறைவேற்றி தரவேண்டும் என்று கோாிக்கை விடுத்துள்ளனா். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என்று தமிழக முதலமைச்சா் விஜய் கூறியது போல் தங்களது ஆட்சியில் சிறிய கட்சிகளுக்கும் பாராபட்சமின்றி மாியாதை கொடுத்தது போல் தமிழகம் முழுவதும் பாரபட்சமின்றி பத்திாிகையாளா்கள் நலனையும் முதலமைச்சா் விஜய் பாதுகாக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் உள்ள பத்திாிகையாளா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி 3வது வார்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்: புதிய ரேஷன் கடை திறப்பு; கவுன்சிலர் ரெங்கசாமி திறந்து வைத்தார்

16 hours ago

பூலித்தேவன் புகழ் போற்றிய திமுக: கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை

18 hours ago

தூத்துக்குடி அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதிய விபத்தில் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

1 day ago

தூத்துக்குடியில் விதிகளை மீறிய 4 ராஜஸ்தான் லாரிகள் சிறைபிடிப்பு: லாரி உரிமையாளர்கள் அதிரடி!

1 day ago

தூத்துக்குடி குறுக்குசாலை கீதாஜீவன் கல்லூரியில் மாணவர் பேரவை நிர்வாகிகள் பதவியேற்பு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் பங்கேற்பு

3 days ago

மரக்கன்று நடும் விழா பெயரில் வசூல் வேட்டை? தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் மீது வியாபாரிகள் புகார்

4 days ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement