Advertisement

Share On
தமிழ்நாடு செய்திகள்

முதல் நாளிலேயே ரூ.125.25 கோடி வசூல்‘ஜெயிலர் 2’ படத்துக்கு உலகளவில் அமோக வரவேற்பு!

Admin 3 days ago

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. 2023-ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.


முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், யோகிபாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்திலும் நடித்துள்ளனர். இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, ஹிருத்திக் ரோஷன், மிதுன் சக்கரவர்த்தி, விஜய் சேதுபதி, நமோ நாராயணா உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

படத்தின் முதல் பாதியில் நமோ நாராயணா, யோகிபாபு உள்ளிட்டோரின் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களைக் கவர்வதாகக் கூறப்படுகிறது. இரண்டாம் பாதியில் ஆக்‌ஷன் மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அனிருத்தின் பின்னணி இசையும் படத்துக்கு வலுசேர்ப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முதல் நாளில் ரூ.125.25 கோடி வசூல்?
இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.125.25 கோடி வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் இந்தியாவில் ரூ.70.25 கோடியும், வெளிநாடுகளில் ரூ.55 கோடியும் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் நாளிலேயே இவ்வளவு பெரிய வசூலைப் பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிலையில், வார இறுதியில் இப்படத்தின் உலகளாவிய வசூல் ரூ.200 கோடியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரூ.1,000 கோடி வசூல் சாதனையைப் படைக்குமா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement