Share On
மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக பணி செய்ய நிர்பந்தம்!! 'சமூக வலைத்தளப் பதிவால் பரபரப்பு!!

Admin 2 weeks ago தூத்துக்குடி
தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகத்தின் புறநகர் பணிமனையில் பணியாற்றும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருவதாக சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அந்த பதிவில், தூத்துக்குடி புறநகர் பணிமனை அதிக கிலோமீட்டர் இயக்கம் நடைபெறும் பணிமனைகளில் ஒன்றாக இருப்பதால், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் ஏற்கனவே கடுமையான பணிச்சுமையை எதிர்கொண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அதிகாலை 4 மணி முதலே சேவையைத் தொடங்கும் பேருந்துகளை இயக்கும் தொழிலாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வழக்கமான கிலோமீட்டர் பணியை முடித்த பிறகும், இரவு நேரத்தில் அதிகாரிகளின் உத்தரவின்படி மதுரை சென்று, அங்கிருந்து மீண்டும் திருச்செந்தூருக்கு இயக்குமாறு கட்டாயப்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை ஏற்க மறுக்கும் தொழிலாளர்கள் மீது அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும், கீழ்மட்டம் முதல் உயர் அதிகாரிகள் வரை இதற்கு ஒத்துழைப்பு இருப்பதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கடும் மனஅழுத்தத்துடனும், 24 மணி நேரத்திற்கும் மேலாக பணியாற்ற வேண்டிய சூழலிலும் உள்ளதாகவும், இதற்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்ற ஏக்கத்துடன் பணியாற்றி வருவதாகவும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவு போக்குவரத்து தொழிலாளர்கள் மத்தியில் பரவலாக பகிரப்பட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி நகரின் பிரதான சாலையில் புதிய டாஸ்மாக் கடைகள்; பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்!!

1 day ago

கர்மவீரர் காமராஜர் 124-வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் பா.ஜ.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை

3 days ago

தூத்துக்குடி அருகே 200 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது: தட்டப்பாறை போலீசார் நடவடிக்கை!!

1 week ago

தூத்துக்குடியில் ₹1,000-க்கும் மேற்பட்ட போலி இன்சூரன்ஸ் பாலிசி மோசடி: லாரி அதிபர்கள் உட்பட 4 பேர் கைது!

2 weeks ago

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி ரெய்டு! பொறியியல் பிரிவு அலுவலகம் சீல் வைத்து சோதனை

2 weeks ago

தூத்துக்குடி போக்சோ, கொலை வழக்குகளில் தண்டனை பெற்றுத் தந்த காவலர்களுக்கு டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டு

2 weeks ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement