Share On
மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி போக்சோ, கொலை வழக்குகளில் தண்டனை பெற்றுத் தந்த காவலர்களுக்கு டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டு

Admin 2 weeks ago தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற போக்சோ மற்றும் கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் பெற்றுத் தந்த காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற போக்சோ மற்றும் கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தின் மூலம் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் பெற்றுத் தந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் இரா. திருநாவுக்கரசு நேற்று (01.07.2026) திருநெல்வேலி சரக அலுவலகத்திற்கு வரவழைத்து நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் பெற்றுத் தந்த அப்போதைய விசாரணை அதிகாரியும், தற்போது அம்பாசமுத்திரம் காவல் நிலைய ஆய்வாளருமான வனிதா மற்றும் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய தலைமை காவலர் சமுத்திரகனி ஆகியோர் பாராட்டுப் பெற்றனர்.

மேலும், சிப்காட் காவல் நிலைய கொலை வழக்கில் குற்றவாளிக்கு நீதிமன்றத்தின் மூலம் சிறைத் தண்டனை மற்றும் அபராதம் பெற்றுத் தந்த முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரன் மற்றும் நீதிமன்ற தலைமை காவலர்கள் சிவனேசமாணிக்கம், இளையராஜா ஆகியோருக்கும் நற்சான்றிதழ் வழங்கி காவல்துறை துணைத் தலைவர் பாராட்டு தெரிவித்தார்.

குற்ற வழக்குகளில் திறம்பட விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களின் பணியை ஊக்குவிக்கும் வகையில் இந்த பாராட்டு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்

தூத்துக்குடி நகரின் பிரதான சாலையில் புதிய டாஸ்மாக் கடைகள்; பாஜக மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கண்டனம்!!

1 day ago

கர்மவீரர் காமராஜர் 124-வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் பா.ஜ.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை

3 days ago

தூத்துக்குடி அருகே 200 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் கைது: தட்டப்பாறை போலீசார் நடவடிக்கை!!

1 week ago

தூத்துக்குடியில் ₹1,000-க்கும் மேற்பட்ட போலி இன்சூரன்ஸ் பாலிசி மோசடி: லாரி அதிபர்கள் உட்பட 4 பேர் கைது!

2 weeks ago

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி ரெய்டு! பொறியியல் பிரிவு அலுவலகம் சீல் வைத்து சோதனை

2 weeks ago

தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழகத்தில் 24 மணி நேரத்திற்கும் மேலாக பணி செய்ய நிர்பந்தம்!! 'சமூக வலைத்தளப் பதிவால் பரபரப்பு!!

2 weeks ago

Share On

உலக புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement