மாநில அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் கடும் எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊழல் புகாரில் சிக்கும் அமைச்சர்கள் மீது எந்தவித பாரபட்சமும் இன்றி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேவையானால் அமைச்சர் பதவியும் பறிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்ததாக கூறப்படுகிறது.
தனது தலைமையிலான த.வெ.க. அரசு லஞ்சமற்ற, வெளிப்படைத்தன்மை கொண்ட அரசாக செயல்பட வேண்டும் என்பதில் அமைச்சர்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியதாக தகவல் தெரிவிக்கிறது.
மேலும், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஆய்வு என்ற பெயரில் தேவையற்ற முறையில் செல்வதை அமைச்சர்கள் தவிர்க்க வேண்டும் என்றும், பள்ளிகளுக்கு சென்று ரீல்ஸ் உள்ளிட்ட சமூக வலைதள விளம்பர நடவடிக்கைகளில் ஈடுபட்டு கல்விச் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
"தவறு செய்பவர்களில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்ற பாகுபாடு பார்க்கமாட்டேன்; யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று முதலமைச்சர் விஜய் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.