Share On
ஆன்மீகம்

ஸ்ரீ ருத்ர பரமேஸ்வரர் ஆலயத்தில் 48வது நாள் மண்டல பூஜை விழா-திரளான பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டுகோள்!!

Admin 2 months ago 212

தூத்துக்குடி மாவட்டம் தெய்வசெயல்புரம், திருவேங்கிடபுரம், எல்லைநாயக்கன்பட்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ருத்ர பரமேஸ்வரர் ஆலயத்தில் 48வது நாள் மண்டல பூஜை விழா வரும் ஜூன் 13ஆம் தேதி சனிக்கிழமை காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.


மிகவும் பழமை வாய்ந்த இத்திருக்கோவிலில் பல தலைமுறைகளாக சிவபெருமான் ஆலமரத்திலும் வேப்பமரத்திலும் “ருத்ர பரமேஸ்வரர்” என்னும் நாமத்தால் அருள்பாலித்து வருகிறார். சமீபத்தில் ஆலயத்தில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றதை தொடர்ந்து மண்டல பூஜை விழா நடைபெறுகிறது.

அன்றைய தினம் பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரங்கள் இணையும் புனித நாளாக இருப்பதால், பக்தர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு இறைவனின் அருளாசியை பெறுமாறு ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், எதிர்கால திருப்பணிகளின் ஒரு பகுதியாக அருள்மிகு ஸ்ரீ ருத்ர மகேஸ்வரி அம்மன், ஸ்ரீ விநாயகர், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகப் பெருமான், ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி, ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ துர்க்கை அம்மன் மற்றும் நவகிரக தெய்வங்களின் திருவுருவச் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. அதேபோல் 63 நாயன்மார்கள் மற்றும் 18 சித்தர்களின் சிலைகளும் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திருப்பணிக்காக ஆன்மீக அன்பர்கள் மற்றும் பக்தர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி மற்றும் சிற்ப உபயங்களை கோவிலுக்கு நேரடியாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ வழங்கி பங்கேற்று இறையருள் பெறுமாறு கோவில் நிர்வாக குழு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Share On

தூத்துக்குடி புகழ்பெற்ற இடங்கள்

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

எட்டயபுரம் அரண்மனை

SPICOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்

Advertisement